சாலையும் மனிதர்களும்...

சாலையும் மனிதர்களும்           

இது
என் சாலை பயணத்தில் என் பேனாக்களை
கண்டுபிடித்த கதை மன்னிக்கவும் கவிதை
சாலைகள் ஒரு சில நேரங்களில் முதலாளித்துவம் பேசும் பொதுவுடமைவாதிகள்
சேரிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை
சாலைகள் ஒரு சில நேரங்களில் நாத்திகம் பேசும் ஆத்திகர்கள்
போராட்டங்கள் முதல் கோயில்கள் வரை
சாலைகள் ஒரு சில நேரங்களில் நல்லது செய்யும் கெட்டவர்கள்
சிறைசாலைகள் முதல் சட்டசபை வரை
சாலைகள் நாய்களின் புகழிடம் மற்றும் உயிர்கொல்லி
மனிதர்களுக்கும் தான்
சாலைகள் ஒரு சில நேரங்களில் நாய்களின் படுக்கையறை
குடிகார மனிதர்களுக்கும் தான்
சாலை ஓரங்களில் தொழிலகங்கள்
சாலையே சிலருக்கு தொழிலகங்கள்
விபத்துகளின் விளையாட்டுக் கூடம்
ஒரு சில நேரங்களில் போர்களம்
சாலைகள் கோயிலுக்கு செல்ல தேர்வலம் வர உதவுகின்றன
சாலைகள் மதுகடைக்கு செல்ல சாதி சண்டை போட உதவுகின்றன
இவ்வளவு ஏன் மனிதர்கள் சொத்து சண்டையை தீரத்துக்
கொள்ள கூட சாலைக்கே வருகின்றனர்
என்ன இருந்தாலும் சாலைகளே உங்களை நான் முன்கூட்டியே
வாழ்த்தி வைத்துகொள்கிறேன் ஏனென்றால்
என் இறுதி ஊர்வலத்திற்கும் நீங்களே உதவபோகிறீர்கள் அல்லவா
காணிநிலம் வேண்டும் பராசக்தி அதுவும்
நல்ல சாலையோரம் வேண்டும்.
-    சிவதத்துவ சிவம்
25/10/2010

Powered by Blogger