சாலையும் மனிதர்களும்...

சாலையும் மனிதர்களும்           

இது
என் சாலை பயணத்தில் என் பேனாக்களை
கண்டுபிடித்த கதை மன்னிக்கவும் கவிதை
சாலைகள் ஒரு சில நேரங்களில் முதலாளித்துவம் பேசும் பொதுவுடமைவாதிகள்
சேரிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை
சாலைகள் ஒரு சில நேரங்களில் நாத்திகம் பேசும் ஆத்திகர்கள்
போராட்டங்கள் முதல் கோயில்கள் வரை
சாலைகள் ஒரு சில நேரங்களில் நல்லது செய்யும் கெட்டவர்கள்
சிறைசாலைகள் முதல் சட்டசபை வரை
சாலைகள் நாய்களின் புகழிடம் மற்றும் உயிர்கொல்லி
மனிதர்களுக்கும் தான்
சாலைகள் ஒரு சில நேரங்களில் நாய்களின் படுக்கையறை
குடிகார மனிதர்களுக்கும் தான்
சாலை ஓரங்களில் தொழிலகங்கள்
சாலையே சிலருக்கு தொழிலகங்கள்
விபத்துகளின் விளையாட்டுக் கூடம்
ஒரு சில நேரங்களில் போர்களம்
சாலைகள் கோயிலுக்கு செல்ல தேர்வலம் வர உதவுகின்றன
சாலைகள் மதுகடைக்கு செல்ல சாதி சண்டை போட உதவுகின்றன
இவ்வளவு ஏன் மனிதர்கள் சொத்து சண்டையை தீரத்துக்
கொள்ள கூட சாலைக்கே வருகின்றனர்
என்ன இருந்தாலும் சாலைகளே உங்களை நான் முன்கூட்டியே
வாழ்த்தி வைத்துகொள்கிறேன் ஏனென்றால்
என் இறுதி ஊர்வலத்திற்கும் நீங்களே உதவபோகிறீர்கள் அல்லவா
காணிநிலம் வேண்டும் பராசக்தி அதுவும்
நல்ல சாலையோரம் வேண்டும்.
-    சிவதத்துவ சிவம்
25/10/2010

இரவு சுமை

இரவு சுமை
இரவை யார் சுமப்பார்
கனவை அந்தக் கனவினில் தள்ளும்
இந்த இரவை யார் சுமப்பார்
ஓசைகளை ஓய்வினில் விட்டு விட்டு
ஓநாய்களை எழுப்பிவிடும்
இந்த இரவை யார் சுமப்பார்
ஆட்டங்கள் நின்ற பின்பும்
வாட்டங்களை வாசலில் வைத்தவர் யார்
போர்வைக்குள் பேரிரவை வைத்தவர் யார்
மேகத்தைக் கொண்டு பல கோலத்தை வானத்தில் தீட்டியவர் யார்
மோகத்தைக் கொண்டு பலர் தாகத்தைத் தூண்டியவர் யார்
நிலவை கொண்டு பலர் இரவை நீட்டியவர் யார்
தூங்கினால் காலத்தைக் கலைத்துவிடும்
விழித்துள்ளோர்களுக்கு காலத்தை மூட்டி விடும்
இந்த இரவை யார் சுமப்பார்
இருள் குடி கொண்டிருக்கும் காட்சியின் இடம்
மருள் குடி கொண்டிருக்கும் ஆட்சியின் இடம்
அருள் குடி கொண்டிருக்கும் சாட்சியின் இடம்
இடத்தை அடைந்தவன் இதயத்தை நிறைக்கும் இடமாம்
இடத்தை அடைய முடியாதவன் துடிக்கும் இடமாம்
இந்த இரவை யார் சுமப்பார்
-    சிவதத்துவ சிவம்
12/07/2017

இயற்கை - பூக்கள் வழிகாட்டிய ஓடை

பூக்கள் வழிகாட்டிய ஓடை

பூக்கள் வழிகாட்டிய ஓடையின் வழியே
நனைந்த புல்வெளிகளின் வாசத்தின் ஊடே
நனைந்த மண்ணில் நனைக்கின்ற பாதத்தின் சுகம்
இருள் படர்ந்த குகைகளில்
வெளவால்களின் தொங்கல்
திங்களின் மென்வெண்ணொளியால்
சிரிகின்ற மலர்கள் அழகு
ஒசைகளை ஓய்த்துவிட்டு
பேசுவதையும் நிறத்திவிட்டு
விரிந்த காதின் வழியே
நுழைந்த சப்தத்தை கவனித்தால்
இயற்கையின் சிரிப்போலி
பூமித் தாயின் கொலுசொலி
-    சிவதத்துவ சிவம்
25/05/2009

வாழ்க்கை - கற்றுக் கொள்ளவேண்டும்



கற்றுக் கொள்ளவேண்டும்

சோகங்களோடு சிரிக்கவும்
சிரிக்கும் போது சிந்திக்கவும்
தாழும் போதுதான் உயர்வையும்
உயரும் போதுதான் எளிமையையும்
அறிவை திறந்தது முதலே ஒழுக்கத்தையும்
ஒழுக்கத்தோடு வாழ சுத்தத்தையும்
புரியாத போதுதான் தேடலையும்
தேடிடும் போதே தேடியதை பதியவைக்கவும்
நினைத்த நல்ல செயல்களை நிகழ்தவும்
நிகழ்த்தியதை நிறைவாக்கவும்
இயலாத போதுதான் தன் பலவீனத்தையும்
பலவீனத்தை பலப்படுத்தவும்
பணத்தை புண்ணியமாக்கவும்
புண்ணியத்தை பெருக்கி கொள்ளவும்
உறவுகளோடு நன்கு உறவாடவும்
உறவாடும் போது விழிப்பையும்
அனுபவங்களை வைத்து வாழ்க்கையையும்
வாழ்க்கை முழுவதும் ஆண்டவனையும்
கற்றுக் கொள்ளவேண்டும்
-    சிவதத்துவ சிவம்
03/12/2003

ஆன்மீகம் - நீ பார்க்கிறாய்



நீ பார்க்கிறாய்


நீ பார்க்கிறாய்
நான் தவறு செய்கிறேன்
நீ பார்க்கிறாய்
நான் நேர்மையாகிறேன்
நீ பார்க்கிறாய்
செயல்படுகின்ற வெறுமையோடு
கவிதை அர்த்தப்படுவது காலத்தை பொருத்தது
கடவுள் அர்த்தப்படுவது ஞானத்தை பொருத்தது
நிலவு தெரியபடுவது நிலையை பொருத்தது
வாழ்க்கை தெரியபடுவது புரிதலையை பொருத்தது
என் ஒவ்வொரு செயலையும்
நீ பார்க்கிறாய்
நான் செயலற்று நிற்கும் போதும்
நீ பார்க்கிறாய்
விளைவுகளை நினைத்து கொண்டு
விலகி நிற்கிறேன்
விளைவுகளை கண்டு கொள்ளாமல்
மூழ்கி நிற்கிறேன்
நீ பார்க்கிறாய்
அறிவுரைக்கோ அதட்டலுக்கோ
நீ பார்க்கிறாய்
உன் மேல் பற்று இல்லாமல் விலகுகிறேன்
நீ பார்க்கிறாய்
ஓடி வந்து தழுவுகிறேன்
நீ பார்க்கிறாய்
குழந்தை இளமை முதுமை
வந்து வந்து போகிற வாழ்வில்
கோடை வசந்தம் குளிர்
வந்து வந்து போகிற வாழ்வில்
பொம்மலாட்டத்தில் பொம்மைக்கு சுய விருப்பமில்லை
மனதை நிலைபடுத்திக் கொள்ள கடவுளை தேடுவர்
அதை ஆத்மாவில் நிலைபடுத்திக் கொள்ள நானும் தேடுகிறேன்
நீ பார்க்கிறாய்
உதவுவதற்க்கோ உதறுவதற்க்கோ
-    சிவதத்துவ சிவம்
01/03/2005

Powered by Blogger