வாழ்க்கையின் தங்க விதி



வாழ்க்கையின் தங்க விதி

குபேர மந்திரம் ஓதுவது
ஞானம் பெறுவதற்க்கல்ல

அரசு வேலைக்கு முந்துவது
சேவை செய்வதற்க்கல்ல

ஆசனங்கள் கற்பது
ஆண்டவனை அடைவதற்க்கல்ல

அரசியல் செய்வது
அறம் வளர்ப்பதற்க்கல்ல

ஓயாமல் விமர்ச்சிப்பது
செயல்படுவதற்க்கல்ல

அரிதாரம் பூசி நடிப்பது
மெய் சொல்வதற்க்கல்ல

மதம் மாறுவது
கடவுளை புரிவதற்க்கல்ல

புகழ்ந்து தள்ளுவது
கடமைக்காக அல்ல

அழகான காதலியை தேடுவது
காதலுக்காக அல்ல

நன்றாக படிக்க சொல்வது
அறிவு பசிக்காக அல்ல

கடவுளின் உண்டியலை நிரப்புவது
பக்திக்காக அல்ல

                                - சிவதத்துவ சிவம்

வாழ்க்கை உங்களை வரவேற்கிறது நிங்கள் எங்கே

வாழ்க்கை உங்களை வரவேற்கிறது நிங்கள் எங்கே

திருடிய பிறப்பு

வருடிய காற்று

தெரிகின்ற மேகத்தின் நகர்வு

வாழ்கையின் வரவேற்பறை

முனுமுனுத்து நகர்கின்ற ஏக்கம்

தூக்கத்தை விழுங்கிய கனவு

எடையேறிய வாழ்கை

உங்களுக்காக காத்திருக்கிறது

சொர்கத்தின் வாசலை மூடிவிட்டு

சாளரத்தின் வழியாக நரகத்தை

கொஞ்சம் எட்டி பார்த்து விட்டு

சீக்கிரம் வாருங்கள்

வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது

                                    - சிவதத்துவ சிவம்

வாழ்க்கை - மிச்சமில்லை



மிச்சமில்லை
சூரியன் உதித்ததும் இருள் மிச்சமில்லை
ஆணவம் அறுத்ததும் துன்பம் மிச்சமில்லை
காதல் வந்ததும் உறக்கம் மிச்சமில்லை
ஞானம் அடைந்ததும் ஆசை மிச்சமில்லை
கரை அடைந்ததும் தூய்மை மிச்சமில்லை
செல்பேசிக்குள் நுழைந்ததும் மௌனம் மிச்சமில்லை
டையை குறைத்ததும் நாணம் மிச்சமில்லை
தேவையை விட்டதும் ஏக்கம் மிச்சமில்லை
கணினிக்குள் சென்றதும் எல்லைகள் மிச்சமில்லை
உலகம் சுருங்கியதும் நேரங்கள் மிச்சமில்லை
உயிரை இழந்ததும் எதுவும் மிச்சமில்லை
- சிவதத்துவ சிவம்

 

தத்துவம் - ஒரு பறவையின் மரணம்

ஒரு பறவையின் மரணம்
     
புலப்பாடாத புலன் விலகல் மரணம்
 கட்டிட கலப்பு நகரங்களில்
  பறவைகளின் ஒய்வு நாற்காலி
   மின்சார கம்பிகள் தான்

இடைஞ்சலற்ற வெறுமையான வானத்துப்
  பரவெளியிலிருந்து நகர பறவைகளின்
   குட்டி சரணாலயம் மின்சாரகம்பிகள்

மீன் பிடித்து சாப்பிடமுடியாது ஆனால்
  மின் அடித்து சாகமுடியும்
    கண்முன் தொங்கும் அந்த பறவையின் மரணம்
      யாரை யாரையோ திட்டுகின்றன

இனங்கள் ஒப்பாரி வைத்துவிட்டு
  தன் வேலை பார்க்க கிளம்பிவிட்டன
   இப்போது அது பாக்டீரியாக்களும்
     வைரஸ்களும் மொய்க்கும் மரண மரம்

மனதில் பதிப்பித்திருந்த தத்துவார்த்தங்களை
 புரட்டுகின்ற வேளை கண்ணில் படுகின்றது
  ஒரளவில் நின்று விடுவது தான்
   உயிர்க்கும் கவிதைக்கும் அழகு
     மிதமிஞ்சிய மூப்பு கோரம்
- சிவதத்துவ சிவம்

காதல் - என் காதலியின் கடல்



என் காதலியின் கடல்

னும் என் காதலியும்
கடற்கரைக்கு சென்றோம்
கடல் நீரில் அவள் கூந்தல்
கசக்கினாள் கடல் கறுப்பானது
அவளே கண் திறந்தால்
கடல் நீலமானது
சட்டென்று சிரித்துவிட்டாள்
கடல் உள்வாங்கியது
திரும்பி நடந்தால் நுரைகளின்
இதயம் வெடித்து சிதறின
அவள் காலடிகளை
பின் தொடர்ந்தன அலைகள்
கதிரவனும் கடலும் சண்டையிட்டு
கொண்டன முடிவில் வென்றது கடல்
ஆம் இது என் காதலியின் கடல்
- சிவதத்துவ சிவம்
 

Powered by Blogger