நம்பிக்கை - வானத்தின் கீழ்

                               வானத்தின் கீழ்

மொட்டுகள் மலராத வேளை

பூக்களை தன் அகத்தே வைத்திருக்கும் மரங்கள்

நீர்த்துளிகளை உதிர்த்து விடாமல்

கடந்து போக போகின்றனவோ மேகங்கள்

மௌனமான அர்த்தங்களை காதுக்கே கேளாத வாறு

சொல்லி விட்டு போகும் அசரிரீகள்

இமைகளை திறந்து வைத்து

ஒரு பெருங்கனவு வானத்தின் கீழ்

கல்லாக கடவுளாக இரு தோற்றங்களை

தனகத்தே வைத்திருக்கும் என் கடவுள்

புறாக்களின் காலடியில் ஏதோ செய்தியை

அனுப்பி வைத்திருக்கிறானாம்

கவலைகள் கால் பதிக்காத இதயம் வைத்திருந்தேன்

எனக்காக அதை நான்தொலைத்து விட்டேன்

மீட்கும் வழியை கேட்டிருந்தேன்

வெற்றிக்காய் ஒரு கனவை மூளையில் விதைதிருந்தேன்

மரமாவதற்கு வழிவகை பருவங்கள்

பருவங்களின் வழிதடம் நீ

நமக்காய் ஒரு வெற்றி

மகரந்தங்கள் பறக்கும் காற்றின் ஊடாய்

நமது வெற்றிகள் சிறகடிக்கும்

வானத்தின் கீழ்

நமக்காய் ஒரு வெற்றி

                             - சிவதத்துவ சிவம்

ஆன்மீகம் - அஹம் விருத்தி



ஹம் விருத்தி

எண்ணங்கள் என்ற விதைகள் நிலம் எங்கும்
எண்ணங்கள் உண்ணும் ஆசை பறவைகள்
மனம் என்ற மரத்தை சுற்றி கூடு கட்டும்
அந்த மரம் உள்ளவரை
துன்பம் என்ற இலைகள் உதிரும்
இன்பம் என்ற மலர்கள் மலரும்
ஐம்பூதங்கள் என்ற ஐம்புலன்கள் உரமூட்ட
மனம் நன்றாக வேர் ஊன்றி பெரிய மரமாகும்
ஒரு காலத்தில் நிலமெங்கும்
இலைகள், மலர்கள், விதைகள், பறவைகள்
என்பவை நிலத்தை மறைக்கும்
பின் நானே நிலம் என்று மரம் கருதும்
நிலம் என்னும் ஆண்டவன் சந்நிதியில்
இவை அனைத்தும் வேடிக்கை பார்க்கப்படும்
காலம் மாறும்
ஐம்பூதங்கள் என்ற ஐம்புலன்கள்
வேருக்கு உரமூட்டுவதை நிறுத்தும்
துன்பம் என்ற இலைகள் தொடர்ந்து உதிரும்
இன்பம் என்ற மலர்கள் மலர மறுக்கும்
எண்ணங்கள் என்ற விதைகள் இல்லாததால்
ஆசை பறவைகள் இறக்கும்
மரத்தின் கூறுகள் அனைத்தும் மக்கும்
முடிவில் நிலம் என்னும் ஆண்டவன் வெளிப்படும்
வான் எங்கும் சுழலும் பரமே
மரமும் ஆகி நின்றதை மரம் அறியும்
                                       - சிவதத்துவ சிவம்

மெய் காது



மெய் காது

மேகங்கள் திரண்டது மழை பொழிய மறுப்பதற்க்காக
காகங்கள் கரைந்தன கேட்பார் அற்ற கண்ணீருக்காக
மோகங்களில் விழுவார் ஞானத்தில் எழுவதற்க்காக

நிசப்தமான இரவில் கனவுகள் கத்தின, பல
மாசங்கள் ஆகி வராத மழைக்காக வேர்கள் அழுதன
பாசமில்லா உறவுகள் பகட்டுக்காக ஒட்டின

நரம்பை இழந்த வீணை காற்றில் வாசித்தன
ரபு குலைந்த ஜீன்கள் தவறுகளை பிரசவித்தன
தரவும் பெறவும் இல்லாத காதல் கடலில் கரைந்தன

ஞானத்தில் சேராத மனிதர்கள் இடுகாட்டில் சேர்ந்தனர்
வானத்தில் வட்டமிட்ட வல்லூறுகள் பிணங்களை கழித்தன
அனகமுற்ற மனிதரின் கைகளில் அறத்தின் வசந்தம்
- சிவதத்துவ சிவம்

Powered by Blogger