காதல் - என் காதலியின் கடல்



என் காதலியின் கடல்

னும் என் காதலியும்
கடற்கரைக்கு சென்றோம்
கடல் நீரில் அவள் கூந்தல்
கசக்கினாள் கடல் கறுப்பானது
அவளே கண் திறந்தால்
கடல் நீலமானது
சட்டென்று சிரித்துவிட்டாள்
கடல் உள்வாங்கியது
திரும்பி நடந்தால் நுரைகளின்
இதயம் வெடித்து சிதறின
அவள் காலடிகளை
பின் தொடர்ந்தன அலைகள்
கதிரவனும் கடலும் சண்டையிட்டு
கொண்டன முடிவில் வென்றது கடல்
ஆம் இது என் காதலியின் கடல்
- சிவதத்துவ சிவம்
 

தத்துவம் - கடலைமிட்டாய் ஞானம்



கடலைமிட்டாய் ஞானம்

சின்ன ஆசை தானே என்று
காரணம் பல சொல்லி நிறைவேற்ற ஓடினேன்

தழல் வீரத்தை அறியாது
தொட செல்லும் குழந்தை போல்
காலத்தின் பலம் அறியாதே
நடவுக் செல்லும் விவசாயி போல்

ஆயிரம் ஆண்டுகள் எரிந்தாலும்
சோதியின் ஒளியை அணைத்தால்
ஒரு நொடிக்குள் இருள் சூழும்

நீர்தேக்கங்கள் எல்லாம் நிலா பிம்பங்கள்
விழுந்தாலும் நிலவை மேகங்கள் மறைத்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் மறையும்

ஆயிரமாயிரம் தத்துவங்களால் பெற்ற
ஞானமனாலும் அகங்காரம் விழுந்து கலந்தால்
ஒரு நொடிக்குள் அனைத்தும் அஞ்ஞானம் ஆகும்

அகந்தையால் கெளுத்தபட்ட ஆசை
சிறிதே எரிந்தாலும் பெரிதாய் அனல் கக்கும்
ஆசை அறுக்கவேணும் அதனோடு
ஆசை அறுப்பவனையும் சேர்த்தே அறுக்கவேணும்
ஞானத்தில் சின்ன ஞானம் பெரிய ஞானம் என்று இரண்டில்லை

- சிவதத்துவ சிவம்

வாழ்க்கை - சில தருணங்களே


சி தருணங்களே

ரவு இட்டுச் சென்ற பனித்துளி
முகில்கள் முட்டிச் செல்லும் மலைஉச்சி
துணையை கட்டிக் கொண்ட உறக்கம்
கனவை விட்டு வந்த தூக்கம்
மடியை முட்டிக் குடிக்கும் தாய் பால்
பூச்செடியை நட்டு பறிக்கும் முதல் மலர்
மூன்று முடிச்சை இட்டு மகிழும் கணங்கள்
கார்மேகக் கட்டு அவிழ்ந்து விழும் மழை
செல்பேசியில் திட்டும் காதலியின் குரல்
பிறந்திருக்கும் குட்டியின் மெல்லழகு
நெஞ்சை தட்டிக் கொடுத்த தாயின் தாலாட்டு
முதுகை தட்டி கொடுக்கும் குருவின் பாராட்டு
மனம் கட்டுக்குள் நின்றபோது துளிர்த்த ஆனந்தம்
- சிவதத்துவ சிவம்

 

விதி - ஆமை முட்டை



ஆமை முட்டை

விதி என்ற வாகனம் குழப்பமான
கால வழித்தடங்களிலும் சரியாக போய் சேரும்
இயற்கை தன் நீதியை நிலை நிறுத்திக் கொள்ள
நகர்ந்து கொண்டே இருக்கும் அதன் நகருதலுக்கு
தடையாக நல்லதிருந்தாலும் தீயதிருந்தாலும் உடைபடும்
முட்டைகள் உடை பட்டு
வெளியேறும் ஆமை குஞ்சுகள்
சில கடலுக்கு செல்லலாம்
சில கடல்புறாவின் வயிற்றுக்கு செல்லலாம்
இது தெரிந்திருந்தும் தாய் ஆமை
குஞ்சுகளை விட்டு விட்டு கடலுக்கு செல்லும்
கடலை நோக்கி செல்லும் தன் உடன்பிறப்புகள்
கடல்புறாவின் அலகால் கவ்வப்படுவது
கண்டும் தன் காலடியை கடலை நோக்கியே வைக்கும்
ஆமை குஞ்சுகள்
- சிவதத்துவ சிவம்

 

Powered by Blogger