ஆன்மீகம் - அஹம் விருத்தி



ஹம் விருத்தி

எண்ணங்கள் என்ற விதைகள் நிலம் எங்கும்
எண்ணங்கள் உண்ணும் ஆசை பறவைகள்
மனம் என்ற மரத்தை சுற்றி கூடு கட்டும்
அந்த மரம் உள்ளவரை
துன்பம் என்ற இலைகள் உதிரும்
இன்பம் என்ற மலர்கள் மலரும்
ஐம்பூதங்கள் என்ற ஐம்புலன்கள் உரமூட்ட
மனம் நன்றாக வேர் ஊன்றி பெரிய மரமாகும்
ஒரு காலத்தில் நிலமெங்கும்
இலைகள், மலர்கள், விதைகள், பறவைகள்
என்பவை நிலத்தை மறைக்கும்
பின் நானே நிலம் என்று மரம் கருதும்
நிலம் என்னும் ஆண்டவன் சந்நிதியில்
இவை அனைத்தும் வேடிக்கை பார்க்கப்படும்
காலம் மாறும்
ஐம்பூதங்கள் என்ற ஐம்புலன்கள்
வேருக்கு உரமூட்டுவதை நிறுத்தும்
துன்பம் என்ற இலைகள் தொடர்ந்து உதிரும்
இன்பம் என்ற மலர்கள் மலர மறுக்கும்
எண்ணங்கள் என்ற விதைகள் இல்லாததால்
ஆசை பறவைகள் இறக்கும்
மரத்தின் கூறுகள் அனைத்தும் மக்கும்
முடிவில் நிலம் என்னும் ஆண்டவன் வெளிப்படும்
வான் எங்கும் சுழலும் பரமே
மரமும் ஆகி நின்றதை மரம் அறியும்
                                       - சிவதத்துவ சிவம்

0 Response to "ஆன்மீகம் - அஹம் விருத்தி"

Post a Comment

Powered by Blogger