மெய் காது



மெய் காது

மேகங்கள் திரண்டது மழை பொழிய மறுப்பதற்க்காக
காகங்கள் கரைந்தன கேட்பார் அற்ற கண்ணீருக்காக
மோகங்களில் விழுவார் ஞானத்தில் எழுவதற்க்காக

நிசப்தமான இரவில் கனவுகள் கத்தின, பல
மாசங்கள் ஆகி வராத மழைக்காக வேர்கள் அழுதன
பாசமில்லா உறவுகள் பகட்டுக்காக ஒட்டின

நரம்பை இழந்த வீணை காற்றில் வாசித்தன
ரபு குலைந்த ஜீன்கள் தவறுகளை பிரசவித்தன
தரவும் பெறவும் இல்லாத காதல் கடலில் கரைந்தன

ஞானத்தில் சேராத மனிதர்கள் இடுகாட்டில் சேர்ந்தனர்
வானத்தில் வட்டமிட்ட வல்லூறுகள் பிணங்களை கழித்தன
அனகமுற்ற மனிதரின் கைகளில் அறத்தின் வசந்தம்
- சிவதத்துவ சிவம்

0 Response to "மெய் காது"

Post a Comment

Powered by Blogger