இயற்கை - மழைத்துளி



ழைத்துளி

மழையை போற்றி கவிதை தேடினேன்
துளிகள் மேல் விழுந்து வரிகள் தந்தன

மேகங்கள் போடும் மேளச் சத்தத்தில்
வானுக்கும் மண்ணுக்கும் திருமணம்

விகள் கோர்த்துத் தருவது கவிதை வரிகள்
முகில்கள் கோர்த்துத் தருவது தொடர் மழைத்துளிகள்

மழைத்துளிகள் வந்து நனைத்த லையின்
அழகை மின்னல்கள் வந்து படம் பிடிக்கும்

பூவினுள்ளே தேன் துளிகள் அதில்
விழுந்து நிறைந்தன மழைத்துளிகள்

காற்றே சிறகாய் வானில் பறக்கும் சாரல்களே
மழையில் குளித்த பச்சை இலைகளுக்கு
தலை துவட்டுவது யார் சொல்லுங்களே?

மழைத்துளிகள் வந்து மணல் துளியை நனைக்கும்
போது காற்றுத்துளிக்குள் வாசத்துளிகள்

எறும்புக் கூட்டங்கள் ஓடி ஒழியும்
தட்டான் கூட்டங்கள் கூடி அலையும்

மழைத்துளிகள் வந்து என் தோலில் விழுகையில்
என் ஒவ்வொரு மயிரிழையும் பூக்கும்

மேய்ந்து திரியும் கால்நடைகளுக்கு ஈரப் போர்வை போர்த்தும்
மழைத்துளிகளை குடித்து குடித்து வேர்கள் வயிற்றை நிரப்பும்

நகரத்தில் நீ விழுகையில்
நரகத்தில் நான் காண்பேன் சொர்க்கம்
                        - சிவதத்துவ சிவம்
 

0 Response to "இயற்கை - மழைத்துளி"

Post a Comment

Powered by Blogger