தத்துவம் - ஒரு பறவையின் மரணம்

ஒரு பறவையின் மரணம்
     
புலப்பாடாத புலன் விலகல் மரணம்
 கட்டிட கலப்பு நகரங்களில்
  பறவைகளின் ஒய்வு நாற்காலி
   மின்சார கம்பிகள் தான்

இடைஞ்சலற்ற வெறுமையான வானத்துப்
  பரவெளியிலிருந்து நகர பறவைகளின்
   குட்டி சரணாலயம் மின்சாரகம்பிகள்

மீன் பிடித்து சாப்பிடமுடியாது ஆனால்
  மின் அடித்து சாகமுடியும்
    கண்முன் தொங்கும் அந்த பறவையின் மரணம்
      யாரை யாரையோ திட்டுகின்றன

இனங்கள் ஒப்பாரி வைத்துவிட்டு
  தன் வேலை பார்க்க கிளம்பிவிட்டன
   இப்போது அது பாக்டீரியாக்களும்
     வைரஸ்களும் மொய்க்கும் மரண மரம்

மனதில் பதிப்பித்திருந்த தத்துவார்த்தங்களை
 புரட்டுகின்ற வேளை கண்ணில் படுகின்றது
  ஒரளவில் நின்று விடுவது தான்
   உயிர்க்கும் கவிதைக்கும் அழகு
     மிதமிஞ்சிய மூப்பு கோரம்
- சிவதத்துவ சிவம்

0 Response to "தத்துவம் - ஒரு பறவையின் மரணம்"

Post a Comment

Powered by Blogger