வாழ்க்கை - மிச்சமில்லை
மிச்சமில்லை
சூரியன் உதித்ததும் இருள் மிச்சமில்லை
ஆணவம் அறுத்ததும் துன்பம் மிச்சமில்லை
காதல் வந்ததும் உறக்கம் மிச்சமில்லை
ஞானம் அடைந்ததும் ஆசை மிச்சமில்லை
நகரை அடைந்ததும் தூய்மை மிச்சமில்லை
செல்பேசிக்குள் நுழைந்ததும் மௌனம் மிச்சமில்லை
ஆடையை குறைத்ததும் நாணம் மிச்சமில்லை
தேவையை விட்டதும் ஏக்கம் மிச்சமில்லை
கணினிக்குள் சென்றதும் எல்லைகள் மிச்சமில்லை
உலகம் சுருங்கியதும் நேரங்கள் மிச்சமில்லை
உயிரை இழந்ததும் எதுவும் மிச்சமில்லை
- சிவதத்துவ சிவம்
0 Response to "வாழ்க்கை - மிச்சமில்லை"
Post a Comment