மனிதம் - கருணை கூண்டு


கருணை கூண்டு

வளர்ப்பு பறவைகள் சிறிய கூண்டிற்குள்
பறந்து திரிகின்றன
அறுப்பு பறவைகள் பெரிய கூண்டிற்குள்
ஓரமாய் பயந்து படுத்துள்ளன
ஆகா கூண்டின் அளவிலேயே
தெரிகிறது மனிதர்களின் கருணை
                            - சிவதத்துவ சிவம்

தத்துவம் - வானத்தின் தொடக்கம்

வானத்தின் தொடக்கம்

ஓரு பெரிய எறும்பு சிறிய எறும்பு பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓர் எலி அந்த பெரிய எறும்பை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு பூனை அந்த எலியை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு நாய் அந்த பூனையை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு மனிதன் அந்த நாயை பார்த்து சொன்னான்
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

ஓரு யானை அந்த மனிதனை பார்த்து சொன்னது
என் தலைக்கு மேல் தான் வானம் தொடங்குகிறது என்று

இதை கேட்டுக் கொண்டிருந்த ஓரு கிழ மரம் சிரித்தது
உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
வானம் எங்கிருந்து தொடங்குகிறது என்று 
- சிவதத்துவ சிவம்

இயற்கை - மழைத்துளி



ழைத்துளி

மழையை போற்றி கவிதை தேடினேன்
துளிகள் மேல் விழுந்து வரிகள் தந்தன

மேகங்கள் போடும் மேளச் சத்தத்தில்
வானுக்கும் மண்ணுக்கும் திருமணம்

விகள் கோர்த்துத் தருவது கவிதை வரிகள்
முகில்கள் கோர்த்துத் தருவது தொடர் மழைத்துளிகள்

மழைத்துளிகள் வந்து நனைத்த லையின்
அழகை மின்னல்கள் வந்து படம் பிடிக்கும்

பூவினுள்ளே தேன் துளிகள் அதில்
விழுந்து நிறைந்தன மழைத்துளிகள்

காற்றே சிறகாய் வானில் பறக்கும் சாரல்களே
மழையில் குளித்த பச்சை இலைகளுக்கு
தலை துவட்டுவது யார் சொல்லுங்களே?

மழைத்துளிகள் வந்து மணல் துளியை நனைக்கும்
போது காற்றுத்துளிக்குள் வாசத்துளிகள்

எறும்புக் கூட்டங்கள் ஓடி ஒழியும்
தட்டான் கூட்டங்கள் கூடி அலையும்

மழைத்துளிகள் வந்து என் தோலில் விழுகையில்
என் ஒவ்வொரு மயிரிழையும் பூக்கும்

மேய்ந்து திரியும் கால்நடைகளுக்கு ஈரப் போர்வை போர்த்தும்
மழைத்துளிகளை குடித்து குடித்து வேர்கள் வயிற்றை நிரப்பும்

நகரத்தில் நீ விழுகையில்
நரகத்தில் நான் காண்பேன் சொர்க்கம்
                        - சிவதத்துவ சிவம்
 

ஆன்மீகம் - சிவம்


சிவம்
நான் அவனாக
அவன் நானுமாக
நானின் அழிவில் அவனாக
அவன் நிங்களுமாக
நிங்கள் அவனை நானாக
அவன் ஒவ்வொன்றிலும் தானாக
தான் என்றுள்ள போதும்
அவன் அவனாக
அவனில் ஒன்று நாமெல்லாம்
அவன் அதுவாக
அவைகளும் அவனேயாக
இவைகளுக்குள்ளும் அவனே
அவன் இருப்பதும் அவனே தான்
அவன் வெளியாக
வெளிகள் முழுதும் அவனேயாக
அவன் சிறிதாக
பெரிதாகவும் அவனேயாக
அவன் யாவையுமாக
அவனே யாவையுமாக்க
அவன் என்னையுமாக
அவனே என்னையுமாக்க
அவனே நானின் தேடல்
நானிற்க்குள் அவனின் தேடல்

                                 - சிவதத்துவ
சிவம்
 

சிவதத்துவ சிவம் கவிதைகள் அறிமுகம் பதிவு

சிவதத்துவ சிவம் கவிதைகள் அறிமுகம் பதிவு

தமிழ் மண்ணில்  பிறந்ததால் தமிழ் அறிந்து தொழிலின் தூண்டுதலால் ஆங்கிலம் கற்று சிந்தனைகளின் தூண்டுதாலால் தமிழ் மற்றும் ஆங்கில கவிதைகள் புனைந்து அதை குறைந்தளவு பொதுசபையிலும் தூவ எடுத்த வாய்ப்பு இந்த வலைபூ.

பாரதியாரிடம் இருந்த தேசிய கவிதைகள், காதல் கவிதைகள், ஆன்மீக கவிதைகள் என அவரின் ஒவ்வொரு வாழ்வியல் காலகட்டத்திற்கு தக்கவாறு அவரிடம் இருந்து பிறந்ததோ அது போல இவனின் ஒவ்வொரு வாழ்வியல் காலகட்டத்திற்கு தக்கவாறு கவிதைகள் பிறந்தன

ஒவ்வொரு கவிதைகளும் வெவ்வேறு அல்லது மாறுபட்ட கருத்துருக்களை சொல்வதாக அமைந்தாலும் அந்த ஒவ்வொரு கவிதைகளுக்கு அதற்கு அதற்கு  தக்க உயிர்ப்பு உண்டு.

கவிஞர்களின் சிந்தனை ஓட்டம் என்பது இரண்டு வகையில் வெளிப்படும் அதில் ஒன்று சமூக சூழல்களின் பிரதிபலிப்பு, இரண்டு அவனின் அகவெளிப்பாட்டின் பிரதிபலிப்பு இவை இரண்டுமே இதில் காணலாம்.

பூமி பந்தின் நாடக வசனங்களாக ஒவ்வொரு மக்களின் குரல்களும் ஒலித்து கொண்டிருக்க அதில் இதுவும் ஒன்றாக கடற்கரை மணல் வெளியில் எழுதப்படுவதை போல் இங்கே எழுதபடுகின்றது.

நன்றி
சிவதத்துவ சிவம்

எனது மற்ற வலைபதிவுகள்

Powered by Blogger