விதி - ஆமை முட்டை
ஆமை முட்டை
விதி என்ற வாகனம் குழப்பமான
கால வழித்தடங்களிலும்
சரியாக போய் சேரும்
இயற்கை தன் நீதியை நிலை
நிறுத்திக் கொள்ள
நகர்ந்து கொண்டே இருக்கும்
அதன் நகருதலுக்கு
தடையாக நல்லதிருந்தாலும்
தீயதிருந்தாலும் உடைபடும்
முட்டைகள் உடை பட்டு
வெளியேறும் ஆமை குஞ்சுகள்
சில கடலுக்கு செல்லலாம்
சில கடல்புறாவின் வயிற்றுக்கு செல்லலாம்
இது தெரிந்திருந்தும் தாய் ஆமை
குஞ்சுகளை விட்டு விட்டு கடலுக்கு செல்லும்
கடலை நோக்கி செல்லும் தன் உடன்பிறப்புகள்
கடல்புறாவின் அலகால் கவ்வப்படுவது
கண்டும் தன் காலடியை கடலை நோக்கியே வைக்கும்
ஆமை குஞ்சுகள்
- சிவதத்துவ சிவம்
0 Response to "விதி - ஆமை முட்டை"
Post a Comment