வாழ்க்கை - சில தருணங்களே
சில தருணங்களே
இரவு இட்டுச் சென்ற பனித்துளி
முகில்கள் முட்டிச் செல்லும் மலைஉச்சி
துணையை கட்டிக் கொண்ட உறக்கம்
கனவை விட்டு வந்த தூக்கம்
மடியை முட்டிக் குடிக்கும் தாய் பால்
பூச்செடியை நட்டு பறிக்கும் முதல் மலர்
மூன்று முடிச்சை இட்டு மகிழும் கணங்கள்
கார்மேகக் கட்டு அவிழ்ந்து விழும் மழை
செல்பேசியில் திட்டும் காதலியின் குரல்
பிறந்திருக்கும் குட்டியின் மெல்லழகு
நெஞ்சை தட்டிக் கொடுத்த தாயின் தாலாட்டு
முதுகை தட்டி கொடுக்கும் குருவின் பாராட்டு
மனம் கட்டுக்குள் நின்றபோது துளிர்த்த ஆனந்தம்
- சிவதத்துவ சிவம்
0 Response to "வாழ்க்கை - சில தருணங்களே"
Post a Comment